நோர்வுட் பகுதியில் இன்று மாலை மின்னல் தாக்கியதில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட அதிர்ச்சியில் வீட்டுக்குள் இருந்த ஒருவர் மயக்கம் அடைந்து விழுந்ததில் காயமடைந்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வேனும் மற்றும் பாதிக்கப்பட்டவர் இருந்த வீடும் சேதம் அடைந்துள்ளது.
இன்று மாலை ஐந்து மணியளவில் வேன் நிறுத்தும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு பெரிய மரத்தில் மின்னல் தாக்கியதாகவும் பின்னர் வேன் மற்றும் வீடு மீதும் மின்னல் தாக்கியதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து மழையுடன் கூடிய இடி மின்னல் தாக்கியதால் நோர்வுட் பகுதியில் திடீர் மின்னல் தடை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.