மின்விநியோகத்தை துண்டிப்பதற்கான அவசியம் இதுவரை எழவில்லை – இலங்கை மின்சார சபை

0
249

இதுவரைகாலமும் நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்து போதுமான மழை வீழ்ச்சி பதிவாகவில்லை. மின்விநியோகத்தை துண்டிப்பதற்கான அவசியம் இதுவரை எழவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எனினும், இதுவரைகாலமும் நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் போதுமான மழை வீழ்ச்சி பதிவாகவில்லை என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நீர்மின் நிலையங்களுக்கு அருகிலுள்ள நீர் தேக்கங்களின் நீர் மட்டம் தற்போது 37.7 விகிதமாக குறைந்துள்ளது. இதனால் நாட்டின் நீர்மின் உற்பத்தி 22 விகிதமாக குறைந்துள்ளது.

அதன் காரணமாக இந்நாட்களினூடாக 22 வீதமான மின்சாரமே தேசிய மின் கட்டமைப்புடன் இணைத்துக்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here