மின் கட்டனம் தொடர்பில் பயனாளர்களுக்கு விசேட அறிவிப்பு!

0
166

நாட்டில் நிலுவைத் தொகையை செலுத்த தவறியதற்காக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட நுகர்வோருக்கு புதிய சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) நடவடிக்கை எடுத்துள்ளது.

நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை செலுத்தத் தவறியவர்களின் மின்சார விநியோகத்தை இடைநிறுத்த ஆரம்பித்துள்ளதால், பல நுகர்வோர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிலுவையில் உள்ள கட்டணங்களைச் செலுத்த முடியவில்லை என நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.மேலும், மக்கள் தங்களின் தற்போதைய மற்றும் நிலுவையில் உள்ள கட்டணத் தொகையில் ஒரு பகுதியை செலுத்தினால் மின்சாரம் தடைபடுவதை தடுக்க முடியும் என மின்சாரசபை அதிகாரி தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here