மிஹின் லங்கா விமான நிறுவனத்தை மூடுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் ஊழியர்களை ஆதாரம் காட்டி இலங்கையின் பிரதான சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளன.
அதற்கமைய மிஹின் லங்காவின் பல அதிகாரிகள் ஏற்கனவே ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் சில சிரேஸ்ட அதிகாரிகள் பணிகளில் இருந்து விலகவேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த நிறுவனம் மூடப்படுவதால் வேலையிழக்கும் 310 பேரின் நிலை தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய 2004 ஆம் ஆண்டு மிஹின் லங்கா விமான நிறுவனம் ஆரம்பிக்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது