நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 723 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களை விட தற்போது கொரோனா தொற்றாளர்களி்ன எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது. மக்களின் செயற்பாடு காரணமாக மீண்டும் நாட்டினை முடக்கவேண்டி ஏற்படும் என சுகாதார தரப்பினரினால் எச்சரித்துள்ளனர்.
அத்தோடு இனிவரும் காலங்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களுக்கு அனுமதி பெறப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன (Dr. Asela Gunawardana) தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கைக்கு இன்னும் வரம்பு விதிக்கப்படவில்லை.
ஆனால் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க அனுமதி பெற வேண்டும். அவ்வாறில்லை என்றால், எந்தவொரு விதி மீறலுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியமெனவு அவர் மேலும் தெரிவித்தார்.