வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.மதிப்பீட்டிற்குப் பின் அடுத்த மாதம் முதல் இந்த ஒதுக்கீடு அதிகரிக்கப்படவுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கான எரிபொருள் திட்டம் தொடர்பில் இன்று இலங்கை கனிய வள கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். இதன்போது, எரிபொருள் இறக்குமதி, கையிருப்பு, எரிபொருள் ஒதுக்கம், எரிபொருள் நிலையங்களுடனான ஒப்பந்தம் மற்றும் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.