எதிர்வரும் 4 முதல் 5 மாதங்களுக்கு இலங்கையில் செயற்படும் இந்திய எரிபொருள் நிறுவனமான “இந்தியன் ஒயில் கோப்ரேசன்” எரிபொருட்களை விநியோகிக்கவுள்ளது.
இது தொடர்பில் குறித்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில்,பெற்றோல், டீசல் மற்றும் ஜெட் எரிபொருட்கள் உள்ளடங்கவுள்ளன.
ஏற்கனவே இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 500 மில்லியன் கடன் திட்டத்தின்கீழ் இந்த எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இலங்கையில் செயற்படும் லங்கா ஐஓசி நிறுவனம் தமது எரிபொருட்களுக்கான விலையை அண்மையில் இருமுறை அதிகரித்துள்ளது.
எனினும் இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் இன்னும் அதிகரிப்பை மேற்கொள்ளவில்லை.
இந்திய நிறுவனத்தின் விநியோகத்தின் பின்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலையிலும் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.