முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூபா 10 000 மும் 6 மாத சிறை தண்டனையும் என சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் இன்று தெரிவி்த்தார் முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்வதற்கான விசேட சுற்றி வளைப்புக்கள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார். கொழும்பு உள்ளிட்ட சன நெரிசல் மிக்க பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசமின்றி நடமாடுவதாக தமக்கு புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். முகக் கவசமின்றி பொது மக்கள், பொது வெளியில் நடமாடுவது தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு முரணானது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி, குற்றம் நிருபிக்கப்படும் பட்சத்தில், ஒருவருக்கு 10,000 ரூபா அபராதமும், 6 மாத கால சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். முகக் கவசம் அணியாது, பொது இடங்களில் நடமாடுவோரை கைது செய்வதற்கு வி;சேட பொலிஸ் குழுக்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்