முகத்தில் உள்ள மரு நீங்க எளிய வழிகள் பற்றி இந்தப் பதிவில் அலசுவோம். மருக்கள் நீங்க என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவோருக்கு இந்தப் பதிவு பலனளிக்கும் என்று நம்புகிறோம்.
மருக்கள் பலருக்கும் சாதாரணமாக வருவது உண்டு. மருக்கள் முகத்தில், கழுத்தில், உடலில் எங்கு வேண்டுமானாலும் வரலாம்.
மருக்கள் சருமத்தில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும் கூட முகத்தின் அழகை கெடுத்துவிடும்.
அதனால் அழகு குலைகிறது என்பவர்கள் முகத்தில் உள்ள மரு மறைய என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாமா?
முகத்தில் உள்ள மரு மறைய எளிய வழிகள்
கற்றாழை ஜெல்லையும் எலுமிச்சை சாறையும் சம அளவு கலந்து மரு மீது படும்படு நன்றாக மசாஜ் செய்து வர வேண்டும். பிறகு சற்று சூடாக வெந்நீர் படும்படி நன்றாக ஒத்தடம் கொடுத்து வர வேண்டும்.
தொடர்ந்து இப்படி செய்து வந்தாலும் முகத்தில் உள்ள மரு உதிர உதவும்.
இஞ்சியை தோல் சீவி பேஸ்ட் போல் அரைத்து மரு உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். இஞ்சியின் காரத்தன்மை சருமத்தில் எரிச்சலை உண்டு செய்தாலும் கூட தொடர்ந்து செய்து வரும் போது முகத்தில் உள்ள மரு உதிர வாய்ப்புண்டு.
நன்கு பழுத்த நல்ல வாசம் வரக்கூடிய ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதனை இரண்டு துண்டுகளாக நறுக்கி கருமை நிற மருக்களின் மீதும், அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால் 1 மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
கருமை நிற மரு உள்ள இடத்தை சுத்தமான நீரில் நன்கு கழுவிய பிறகு பயன்படுத்தவேண்டும்.
வெங்காயம், பூண்டு, இஞ்சி போன்றவற்றை சிறு சிறு துண்டுகளாக்கி, பிறகு ஒன்றாக சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்த இந்த கலவையை இரவு தூங்கும்போது கருமை நிற மருக்களின் மீது வைத்துவிட்டு படுக்க வேண்டும்.
பிறகு காலையில் எழுந்து சுத்தமான நீரில் கழுவவேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும். முகத்தில் உள்ள மரு நீங்க உதவும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் விளக்கெண்ணெய் 1/2 டீ ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் 1 டீ ஸ்பூன் அளவு பேக்கிங் சோடாவை எடுத்து குலைத்து கொள்ள வேண்டும்.
பிறகு இந்த கலவையை நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முறை கருமை நிற மருக்களின் மீது தடவிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தினமும் செய்து வந்தால் 15 நாட்கள் முதல் ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும். மருக்கள் உதிர காணலாம்.
அன்னாசி மருக்களைப் போக்க உதவும் மற்றொரு வழியாகும்.
அதற்கு அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து, அதனை மரு உள்ள இடத்தில் தேய்த்து 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இப்படி 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். விரைவில் மரு நீங்க காண்பீர்கள்.
கற்பூர எண்ணையை தினமும் மருவின் மீது தடவி வர மரு நாளடைவில் கொட்டிவிடும். மேலும் மருக்கள் வளராமல் தவிர்க்கலாம். கற்பூர எண்ணை கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் குழைத்தும் பூசலாம். விரைவில் மருக்கள் உதிர ஆரம்பிக்கும்.