முகத்தை ஸ்கேன் செய்தே கொரோனா தொற்றைக் கண்டுபிடிக்கும் கருவி!

0
169

அபுதாபியில் கொரோனா தொற்றுள்ளவர்களை கண்டறியும் பேஷியல் ஸ்கேனர் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் உலகையே அச்சுறுத்தி வரும் ஒரு சொல் என்றால் அது கொரோனா வைரஸ். இதைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இப்போது கொரோனா தொற்றை எந்த சோதனைகளும் இல்லாமல் முகத்தை ஸ்கேன் செய்தே கண்டுபிடிக்கும் கருவியை அபுதாபியில் அறிமுகம் செய்துள்ளனர்.

அபுதாபியை சேர்ந்த இ.டி.இ ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் தான் இந்த ஃபேஷியல் ஸ்கேனரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சோதனை வெற்றி விகிதம் சுமார் 90 சதவீதம் வரை உள்ளதால் அபுதாபியில் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here