முச்சக்கர வண்டிகளை அலங்கரிக்க அனுமதி.

0
191

பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் சில சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு முச்சக்கர வண்டிகளை அலங்கரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடையே நடந்த கலந்துரையாடலின்போது இவ்வாறு அனுமதியளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவும் கலந்துகொண்டார்.

முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பது தொடர்பான சில சட்ட திருத்தங்களுடன் ஆகஸ்ட் 14 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இவ்விடயம் குறித்து கலந்துரையாட பிரதமர் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக விடயத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here