முச்சக்கர வண்டியில் மோதுண்ட பாடசாலை மாணவன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி -சாரதி கைதுபொகவந்தலாவையில் இருந்து கெம்பியன் நோக்கிபயணித்த முச்சக்கர வண்டி பொகவந்தலாவ கெம்பியன் தமிழ் மகா வித்தியாளயத்தில் தரம் ஆறில் கல்வி பயிலும் கௌசிக் எனும் மாணவன் மீது மோதுண்டு பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலா பொலிஸாா் தெரிவித்தனா்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸாா் தெரிவித்தனா்.முச்சக்கர வண்டியின் அதிக வேகம் காரணமாகவே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
குறித்த மாணவன் பொகவந்தலாவ பாரதிபுரம் பகுதியை சோ்ந்தவர் எனவும் கெம்பியன் தமிழ் மகாவித்தியாளயத்தில் தரம் ஆறில் கல்விபயில்வதாகவும் காயமடைந்த மாணவனுக்கு வயது பதினொன்று எனவும் பொலிஸாாின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடா்பாக கைது செய்யபட்ட சாரதியுடைய முச்சக்கர வண்டியையும் பொலிஸாா் கைபற்றியுள்ளனா்.
காயமடைந்த மாணவனுக்கு கை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் காயமடைந்த மாணவனை பொகவந்தலாவ வைத்தியாசாலையில் இருந்து மேலதிக சகிச்சைக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பபட உள்ளதாக வைத்திசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தாா்.
சம்பவம் தொடா்பில் கைது செய்யபட்ட சாரதி நாலை அட்டன் நீதவான் நீதி மன்றில் ஆஜா் படுத்துவதற்கான நடவடிக்கைகலை பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்