அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளூர் சந்தையில் முட்டை விலையை ரூ.10 குறைப்பதாக அறிவித்துள்ளது.
பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் செல்வாக்கை கட்டுப்படுத்தவும், முட்டைகளுக்கான தேவை சமீபத்தில் குறைந்து வருவதால், தேவை மற்றும் விநியோகத்தை சமநிலைப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் நவோத் சம்பத் பண்டாரா தெரிவித்தார்.
இதற்கமைய, வெள்ளை முட்டைகளின் மொத்த பண்ணை விலை ரூ.18 ஆகவும், சிவப்பு முட்டைகள் ரூ.20 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.