முட்டையை 50 ரூபாவிற்கு மேல் நுகர்வோர்கள் கொள்வனவு செய்ய கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரான ஆர்.எம்.சரத் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது முட்டைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் எதிர்வரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது.என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு “நாடு முழுவதிலும் குறிப்பாக மேல் மாகாணத்தில் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளால் முட்டைக்கு செயற்கையாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் முட்டை விலையை அதிகரிக்கும் என்று சில வியாபாரிகள் தற்போது வேண்டுமென்றே முட்டைகளை விற்பனை செய்வதை தவிர்த்து வருகின்றனர்.
தற்போது கோழிப்பண்ணையாளர்களால் போதுமான அளவு முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதுடன் எதிர்வரும் மாதங்களில் முட்டையின் விலை மேலும் குறைக்கப்படும்.50 ரூபாவிற்கு மேல் முட்டைகளை விற்பனை செய்ய முடியாது” என அரசாங்கம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இருப்பினும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில், நுகர்வோர் கட்டுப்பாட்டு விலையை விடக் குறைந்த விலையில் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும்.இதேவேளை சில சூப்பர் மார்க்கெட்டுகளில் முட்டை விலை 65 ரூபா எனவும், பேக்கிங் நோக்கங்களுக்காக 15 ரூபா வசூலிக்கப்படுகிறது.
மேலும் எனவே பொது மக்கள் நுகர்வோர் முட்டையை 50 ரூபாவிற்கு மேல் கொள்வனவு செய்யக்கூடாது.”என கூறியுள்ளார்.