முட்டை விலை எகிறியது ஏன்?

0
40

சந்தையில் முட்டை விலை மீண்டும் அசாதாரணமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முட்டை விலை குறைவால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதாலும், வியாபாரிகள் பண்ணைகளுக்குச் சென்று அதிக அளவில் முட்டைகளை சேகரித்து வருவதாலும் முட்டை விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

நாட்டில் தினசரி முட்டை நுகர்வு 80 லட்சமாக உள்ளது, கடந்த வாரம் முட்டை விலை குறைந்துள்ள நிலையில், முட்டையின் நுகர்வும் 95 லட்சமாக அதிகரித்துள்ளது.

இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச். குணசேகரனிடம் நடத்திய விசாரணையில், பண்ணையில் இருந்து மொத்த விலையில் 22 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட முட்டைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிவித்தார்.

அதிகளவில் முட்டை கொள்முதல் செய்யப்படுவதால் தற்போது பண்ணைகளில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.எனினும், இன்னும் இரண்டு வாரங்களில் முட்டை விலை வழமைக்குத் திரும்பும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here