முதலாம் திகதி வரை முடக்கம் நீடிப்பு

0
244

எதிர்வரும் முதலாம் திகதி வரை முடக்கம் நீடிக்கப்படுவதாக கொவிட் தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்ற, கொவிட் ஒழிப்பு செயலணிக்கூட்டத்தின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஊரங்கு உத்தரவு இவ்வாறு நீடிக்கப்பட்டாலும் – அத்தியாவசிய சேவைகள் மற்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ள தொழில் துறைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், தடுப்பூசி வேலைத்திட்டமும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here