முதலாளிமார் முன்வைத்துள்ள சம்பள யோசனைக்கு தொழிற்சங்கங்கள் மயங்கிவிடக்கூடாது; இ .தம்பையா!

0
148

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் இம்முறை 25 ரூபாவால் உயர்த்துவதற்கு முதலாளிமார் சம்மேளனம் தொழிற்சங்கங்களுக்கு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அடிப்படை சம்பளமாக 575 ரூபாவும், மேலதிக கொடுப்பனவுகளுமாக இணைத்து 936 ரூபாவை வழங்க முதலாளிமார் சம்மேளனம் வழங்க முன்வந்துள்ளமைக்கு கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுப்படும் தொழிற்சங்கங்கள் மயங்கிவிடக் கூடாது என சட்டதரணி இ.தம்பையா தெரிவித்தார்.

பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வழியுறுத்தும் மக்கள் மாநாடு 13.10.2018 அன்று அட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது சமூக அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கவாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

கூட்டு ஒப்பந்த காலப்பகுதிகளில் 50 ரூபாவும், 25 ரூபாவும் என சிறிய தொகைகளை சம்பள உயர்வாக வழங்குவதை முதலாளிமார் சம்மேளனம் ஒரு சட்டகமாக பாவித்து வருகின்றது. இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும்.

அடிப்படை சம்பளம் இன்றைய வாழ்வாதாரத்திற்கு ஏற்றவாறு 1300 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும். அதற்கென இணங்காத முதலாளிமார் சம்மேளனத்திடம் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் தொழிற்சங்கங்கள் வெறுமனே பேச்சுவார்த்தைக்கு சென்றோம். பேசினோம். ஒத்து வரவில்லை என்றொல்லாம் கூறிக் கொண்டு வெளிநடப்பு செய்வது சாத்தியமற்ற ஒரு விடயமாகும்.

இவ்வாறு பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு பதிலாக மக்களின் அபிலாஷைகளையும், கட்சி தலைவர்களின் அபிலாஷைகளையும் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். இதற்கு இணங்கி வராத தொழிற்சங்கங்களுக்கு என்ன கௌரவ குறைச்சல் ஆகிவிட போகின்றது என அவர் கேள்வி எழுப்பினார்.

அதே நேரத்தில் முதலாளிமார் சம்மேளனத்திடம் இத் தொழிற்சங்கங்கள் முறையாக பேசப்படுவது இல்லை என குற்றம் சுமத்திய இவர், மக்களிடமும் மக்கள் பிரதிநிதிகளிடமும் கலந்தாலோசித்து அந்த ஆலோசனையின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கபட வேண்டும் என வழியுறுத்துவதற்காகவே முதன் முறையாக இந்த மாநாடு கூடப்படுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here