இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.




