முதல் போட்டியில் இலங்கைக்கு வெற்றி!

0
8

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணி சார்பில், பர்வேஸ் ஹொசைன் எமோன்(Parvez Hossain Emon) அதிகபட்சமாக 38 ஓட்டங்களையும் முஹமட் நைம் ஆட்டமிழக்காது 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டர்.

இதன்படி, 155 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அணி சார்பில், பெத்தும் நிஸ்ஸங்க 42 ஓட்டங்களையும் குசல் பெரேரா 24 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here