வெளியாகியுள்ள க.பொ.த சாதாரணப் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய பிரதேசமான அக்கரப்பத்தனை ஹோல்புறூக் ரீப்பப்ளிகன் ஆங்கில மொழி சர்வதேச பாடசாலை மாணவர்கள் முதல் தடவையாக பரீட்சைக்கு தோற்றி 100 சதவீத சிறந்த பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் திருமதி கலாநிதி ஆர் .கே.ஜெயசத்தியவாணி தெரிவித்தார்;
2021 ஆண்டு இப்பாடசாலை கா.பொ.த சாதாரணம் வரை கற்பதற்கு அதிபர் திருமதி ஜெயசத்தியவாணியின் கடும் முயற்சியால் பாடசாலை நிர்வாக மற்றும் ஆசிரியர்களின்; பூரண பங்களிப்புடன் தரம் உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெளியாகிய பெறுபேறுகளின் அடிப்படையில் எஸ். ரிசிபாதம் 04 ஏ 03 பி 02 சி எஸ் .லக்ஷான் 04 ஏ 03 பி0 2சி எஸ். வித்தியாசகர் 07ஏ 02 பி. எம். கவின்ஷாகர் 04பி 03சி 02 எஸ் . தி.நீபன் கிளிபர்ட் 04ஏ 02பி 02சி 01எஸ் எஸ். சன்ஜை 03ஏ 03பி 02சி 01எஸ் . எல். லான்காந் 07ஏ 01பி 01சி என் .சஜித்திரா 07ஏ 02பி எஸ் .அஸ்மித்தா 07ஏ 01பி 01சி ஜே. தனுசிக்கா 05ஏ 02பி 02சி என்ற ரீதியில் பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் மேலும் தெரிவித்தார்.
இந்த பாடசாலையிலிருந்து பரீட்சைக்கு தொற்றிய மாணவர்களில் ஆங்கிலம்,உடற் கல்வியும் சுகாதாமும்,சமயம்,தமிழ்,சிங்கள மொழி,கணிதம்,விஞ்ஞானம் வரலாறு வர்த்தகமும் கணக்கியல்,ஆங்கில இலக்கியம் உள்ளிட்ட பாடங்களுக்கு 100 சதவீத சித்தி பெற்;று பத்து மாணவர்கள் உயர்தரத்துக்கு தகுதியினை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்