முதல் 10 நாடுகளில் இடம்பிடித்துள்ள இலங்கை

0
210

53 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான உலக வங்கியின் அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 10 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.

குறித்த அறிக்கையின்படி, அதிக பெயரளவிலான உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில், ஆண்டு அடிப்படையில் 91% உடன் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

2021 செப்டம்பரில் 9.9% ஆக இருந்த இலங்கையின் உணவுப் பணவீக்கம், ஏப்ரல் 2022 (45.1%) முதல் ஜூலை 2022 (90.9%) வரையிலான நான்கு மாத காலப்பகுதிக்குள் உச்சத்தை எட்டியுள்ளது.

ஆண்டு அடிப்படையில் உணவுப் பணவீக்கம் 353% என்ற பட்டியலில் ஜிம்பாப்வே முதலிடத்திலும், லெபனான் 240% மற்றும் வெனிசுலா 131% உடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here