இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக முத்தரப்பு T20I தொடரொன்றில் பங்கேற்கவுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள T20I உலகக்கிண்ணத்துக்கான தயார்படுத்தலுக்காக இந்த தொடரை ஏற்பாடு செய்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதில் ஆப்கானிஸ்தான் அணியானது பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதன்முறையாக T20I போட்டிகளில் விளையாடவுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த தொடரில் ஒவ்வொரு அணிகளும் தலா 2 தடவைகள் மோதவுள்ளதுடன், இறுதிப்போட்டி நவம்பர் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.
முதல் இரண்டு போட்டிகள் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், ஏனைய போட்டிகள் லாஹுரில் நடைபெறவுள்ளன.
போட்டி அட்டவணை
17 நவம்பர் – பாகிஸ்தான் எதிர் ஆப்கானிஸ்தான் (ராவல்பிண்டி)
19 நவம்பர் – இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான் (ராவல்பிண்டி)
22 நவம்பர் – பாகிஸ்தான் எதிர் இலங்கை (லாஹுர்)
23 நவம்பர் – பாகிஸ்தான் எதிர் ஆப்கானிஸ்தான் (லாஹுர்)
25 நவம்பர் – இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான் (லாஹுர்)
27 நவம்பர் – பாகிஸ்தான் எதிர் இலங்கை (லாஹுர்)
29 நவம்பர் – இறுதிப்போட்டி (லாஹுர்)