ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தம்மை நீக்கியமைக்கு எதிராக அமைச்சர் மஹிந்த அமரவீர தாக்கல் செய்திருந்த வழக்கில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்குமாறு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதிவாதிகளுக்கு கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இன்று (11) உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு எதிரானது என மஹிந்த அமரவீர தாக்கல் செய்த மனுவில் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த மனுவில் பிரதிவாதிகளாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன, தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால உள்ளிட்ட சிலர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மகிந்த அமரவீர நீக்கப்பட்டமை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அரசியலமைப்பிற்கு எதிரானது என்பதால், அவரை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.