முன்னாள் அமைச்சர் குமார வெல்கம (Kumara Welgama) தனது 74 ஆவது வயதில் காலமானார்.
கொழும்பில் (colombo) உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
2020 பொதுத் தேர்தலில் அவர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.வெல்கம 2007 முதல் 2010 வரை கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சராகவும், 2010 முதல் 2015 தொடக்கம் வரை இலங்கை சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்களில் போக்குவரத்து அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
குமார வெல்கமவுக்கு சுகயீனம் ஏற்பட்டமையினால் மூன்று மாத விடுமுறை வழங்குவதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இந்நிலையில், தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இறுதிக் கிரியைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.