வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பணியாளர்களை அனுப்பும் செயற்பாட்டில் முறைகேடுகள் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார பிணைடியில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று காலை (15)வாக்குமூலம் அளிக்க அவர் முன்னிலை ஆன போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அவர் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆதரப்படுத்தப்பட்ட போது நீதிமன்றம் பிணை வழங்க உத்தரவிட்டது.