முன்னாள் ஜனாதிபதி சலுகைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு!

0
2

முன்னாள் ஜனாதிபதி சிறப்பு சலுகைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலம் சற்று நேரத்திங்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இந்த சட்டமூலத்தை முன்வைத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனுபவித்து வரும் சிறப்பு சலுகைகளை ரத்து செய்வதற்காக, 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் எண் ஜனாதிபதி உரிமைச் சட்டத்தை ரத்து செய்வதற்கான தொடர்புடைய சட்டமூலம் அண்மையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட மூலத்தின்படி, முன்னாள் ஜனாதிபதி அல்லது மனைவிக்கு வழங்கப்படும் எந்தவொரு வீடு, மாதாந்திர கொடுப்பனவும், மாதாந்திர செயலக கொடுப்பனவு, போக்குவரத்து, பிற வசதிகள் மற்றும் மாதாந்திர ஓய்வூதியமும் ரத்து செய்யப்பட உள்ளன.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை ரத்து செய்யும் வகையில், ஜனாதிபதியின் உரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here