குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் டிஐஜி பிரியந்த ஜயக்கொடியை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் காஞ்சனா நிரஞ்சலா டி சில்வா நேற்று செவ்வாய்க்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார்.
டுபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா என்பவரிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் போலி முறைப்பாடு ஒன்றை வழங்கியமை தொடர்பில் முன்னாள் டிஐஜி பிரியந்த ஜயக்கொடி கடந்த திங்கட்கிழமை (28) மாலை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கைதுசெய்யப்பட்ட முன்னாள் டிஐஜி பிரியந்த ஜயக்கொடி சுகயீனம் காரணமாக ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மஹர நீதவான் காஞ்சனா நிரஞ்சலா டி சில்வா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.