மினுவாங்கொடயில் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்த காரணத்துக்காக சந்திம ஜெயரத்ன எனும் 45 வயது நபர் இன்று (15) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்பேரில் சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் T-56 ரக துப்பாக்கி, ஒரு கைத் துப்பாக்கி, T-56 தோட்டாக்கள், கைத் துப்பாக்கி தோட்டாக்கள், மூன்று வாள்கள் மற்றும் இரண்டு கத்திகளையும் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் இலங்கை சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்றும் தற்போது பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.