புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பதவியேற்று ஒரு சில நிமிடங்களிலேயே மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக கடந்த 9ஆம் திகதி பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.