முன்னாள் மனைவியுடன் டான்ஸ் ஆடிய இளைஞரின் கழுத்தை வெட்டிக்கொன்ற கணவர்

0
20

இசை நிகழ்ச்சியின் போது இளைஞர் ஒருவர் கழுத்தை வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் தொடங்கொட, ஜன் உதான கிராமத்தைச் சேர்ந்த மெனுர நிம்தர வணிகசேகர என்ற 20 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்ததாக கூறப்படும் நபர் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் சில நாட்களுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் களுத்துறை, கமகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிட வந்த அந்த பெண், அவர் பணிபுரியும் ஆடை தொழிற்சாலையில் இளைஞர் ஒருவருடன் நடனமாடியுள்ளார்.

அதன்போது அங்கிருந்த குறித்த பெண்ணின் முன்னாள் கணவர், அப்பெண்ணுடன் நடனம் ஆடிய இளைஞருடன் வாய்த்தர்க்கம் செய்து அவரை கூறிய ஆயுதத்தால் கழுத்தில் வெட்டி உள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here