டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. பல சாதனைகளையும் தன் வசமாக்கியது.
இப்போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இன்று வரலாற்றுச் சாதனை படைத்தார். அவர் தனது நான்கு ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் முலம் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற லாசித் மலிங்காவின் நீண்டகால சாதனையை பும்ரா முறியடித்தார்.
டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள்
ஜஸ்பிரித் பும்ரா – 40
லசித் மலிங்கா – 38
அன்ரிச் நார்ட்ஜே – 38
அர்ஷ்தீப் சிங் – 36
டிம் சவுத்தி – 36
பும்ராவை இந்தியாவின் ஒரு “பொக்கிஷம்”. ஆட்டத்தின் நெருக்கடியான நேரத்திலும் மிகத் துல்லியமான பந்துகளை வீசுவதில் அவர் வல்லவர் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார்.




