நோர்வூட் நகரில் இரண்டு பிரதான தொழிற்சங்க குழுவினர்களுக்கிடையிலான மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய மத்திய மாகாண சபை உறுப்பினரை நோர்வூட் பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவரும் நோர்வூட் பிரதேசசபை உ றுப்பினருமாகிய பா. சிவனேசன் தெரிவித்தார்.
கடந்த 28 ம் திகதி மாலை நோர்வுட் நகரில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உட்பட ஐவர் காயமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மோதல் சம்பவம் தொடர்பில் இரு தரப்பினரின் முறைப்பாட்டிற்கமைய விசாரணையை ஆரம்பித்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்து அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 11, ம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந் நிலையில் மஸ்கெலியாவிலிருந்து பொகவந்தலாவ நோக்கி சென்ற தன்னை தாக்கி தனது வாகனத்தையும் சேதப்படுத்திய மத்திய மாகாணசபை உறுப்பினர் உள்ளிட்டோர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோதும் பொலிஸார் மாகாணசபை உறுப்பினரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என பா சிவனேசன் மேலும் தெரிவித்தார்.
மலையக கள்ளன்