எதிர்காலத்தில் முறையான பயிற்சி இன்றி முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தற்போது நாடளாவிய ரீதியில் 19,000 பாலர் பாடசாலைகள் உள்ளதோடு அவற்றில் கற்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 40,000 ஆகும்.
எதிர்காலத்தில் முறையான பயிற்சி மற்றும் டிப்ளோமா பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களே முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதிக்கப்படுவர் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.