முல்லைத்தீவில் 13 வயதுச் சிறுமி பாலியல் வன்புணர்வு! உறவு முறையான ஒருவர் கைது

0
134

முல்லைத்தீவு – முள்ளியவளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 13 அகவை பாடசலை மாணவியினை (சிறுமியை) பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய உறவு முறையான ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருகையில், முள்ளியவளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் தாய் இல்லாத நிலையில் தந்தை மற்றும் சகோதரனின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த சிறுமி மீது, அவரது மாமன் பாலியல் தொந்தரவு புரிந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 10 ஆம் மாதம் 17 ஆம் திகதி வீட்டில் உறவினர்கள் இல்லாத நிலையில் வீட்டிற்குள் சென்ற மாமன் தனிமையில் இருந்த சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த அநீதியினை யாரிடம் சொல்வது என்று தெரியாத நிலையில், பாடசாலை ஆசிரியரிடம் தகவலை தெரியப்படுத்தியுள்ளதை தொடர்ந்து பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கப்பட்டு தொடர்ந்து காவல்துறையினரின் உதவியுடன் குறித்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ பரிசோதனை அறிக்கையில் சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து, முல்லைத்தீவு பெண்கள் சிறுவர் பாதுகாப்பு காவல்துறை உத்தியோகத்தர்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு குறித்த நபரை கைது செய்துள்ளார்கள்.

இந்தச் சம்பவம் 29.12.22 அன்று இடம்பெற்றுள்ளது.கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளார்கள்.

குறித்த நபர் சிறுமியின் அக்கா முறையான 20 அகவையுடை யுவதியுடனும் பாலியல் துஸ்பிரயேகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here