நுவரெலியா மாவட்டம் ஹங்குரன்கெத்த தேர்தல் தொகுதியிலுள்ள ஹேவாஹெட்ட முல்லோயா தோட்ட கீழ்ப்பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இந்தக் கோவில் நிர்மாணத்திற்காக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட நிதிப் பங்களிப்பை செய்திருந்தார்.
இந்த ஆலயத்தின் அறங்காவலர் சபையினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் ஹங்குரன்கெத்த அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான சதானந்தன் ஆகியோரின் அழைப்புக்கேற்ப இந்த கும்பாபிஷேக நிகழ்வில் பிரதம அதிதியாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமாரும் சிறப்பு அதிதியாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரனும் கலந்துகொண்டனர்.
அத்துடன் ஹங்குரன்கெத்த பிரதேச அரசியல் பிரமுகர்களும் தோட்ட அதிகாரிகளும் ஏனைய முக்கியஸ்தர்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.