மூடப்படும் மதுபான சாலைகள்; மதுபிரியர்களுக்கு வெளியான அறிவிப்பு!

0
189

தீபாவளித் தினமான எதிர்வரும் 24ஆம் திகதி, நாட்டில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் பகுதிகளில் மதுபானசாலைகளை மூடிவிடுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.கலால் திணைக்களஆணையாளர் நாயகத்திற்கு, கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் அனுப்பியுள்ள அவசரக் கடிதமொன்றிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்ந்து அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி,கேகாலை ஆகிய பகுதிகளில் பெரும்பான்மையாக இந்தியா வம்சாவளித் தமிழ்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஆகையால், குறித்த பிரதேசங்கள் மற்றும் தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் பகுதிகளில் தீபாவளி தினத்தன்று மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here