கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் மட்டும் 60 கர்ப்பவதி தாய்மாரும், 89 சிறுவர்களும் உயிரிழந்தனர் என்று சுகாதார அமைச்சின் தாய் மற்றும் சிறுவர் சுகாதார பணிப்பாளர், மருத்துவர் சித்ரமாலி டி சில்வா இதனைத் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். கர்ப்பவதி தாய்மார்களும் பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.