மலையக விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ளது. கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 3 மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள பிரதேச செயலக பிரிவு, இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல பிரதேச செயலக பிரிவு மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுகளுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மலையகத்தில் பல பகுதிகளில் மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மலையக விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின் காரணமாக குறித்த மரக்கறிகள் அழுகி போவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த நிலை தொடர்ந்து நீடிப்பதன் காரணமாக தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலை குறிப்பிட்டளவு உயர்ந்துள்ளது.
தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்குமாயின் மேலும் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.