மூன்று வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு…

0
132

லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மூன்று வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கிராம் வட்டானா பருப்பின் புதிய விலை ரூ.275.00. ஆகவும், ஒரு கிலோ கிராம் கோதுமை மா 195.00 ரூபாவாகவும், சிவப்பு பருப்பு ஒரு கிலோ கிராம் 295.00 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் வறுமையை ஒழிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் லங்கா சதொச நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் உன்னத இலக்குடன் மேற்குறிப்பிட்ட மூன்று வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ள இந்த மூன்று வகையான அத்தியாவசியப் பொருட்களையும் நேற்று (15) முதல் நாட்டிலுள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களினூடகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here