தனது கடைசி பிள்ளையான மூன்று வயது குழந்தை மீது கொதி நீரை வீசிய கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை தலைக்கேறிய நிலையிலேயே தந்தை இந்த செயலை செய்துள்ளார். இந்த சம்பவம் லிந்துலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பெயாவள் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குடும்ப வறுமை காரணமாக பிள்ளைகளின் தாயார் கொழும்பில் பணியாற்றி வருகின்றார்.அவரது ஆறு பிள்ளைகளும் அம்மம்மாவின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் மதுபோதையில் வந்த தந்தை தனது ஆறாவது பிள்ளையான மூன்று வயது குழந்தை மீது கொதி நீரை ஊற்றியுள்ளார்.
இதனால் எரிகாயமடைந்த குழந்தை லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன். சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.