நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹகராபிடிய – ஜம்புதென்ன பகுதியில் மூன்று வர்த்தக நிலையங்களில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
ஹாட்வெயார், மல்லிகைக்கடை மற்றும் மட்பாண்டம் விற்பனை நிலையம் என்பவற்றிலேயே நேற்று அதிகாலை 1.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ பரவல் ஏற்பட்ட வர்த்தக நிலைய கட்டடத்தொகுதியின் உரிமையாளர் ஒருவர் எனவும், சம்பவத்தின்போது அங்கு எவரும் இருக்கவில்லை எனவும் தெரியவருகின்றது.
தீ விபத்தில் மல்லிகைக்கடை முற்றாக தீக்கிரையாகியுள்ளது. ஏனைய இரு கடைகளும் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
மின்கசிவு காரணமாக தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)