மூலநோய் பாதிப்பு உண்டாவதற்கான முக்கியமான காரணங்கள் என்ன…?

0
293

மூலநோய் பாதிப்பு இருந்தாலும், பலர் அதை வெளியில் சொல்வதற்குக் கூச்சப்படுவார்கள். மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வதற்குத் தயங்குவார்கள். அதனாலேயே பாதிப்பு இன்னும் அதிகமாகி, அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்குக் கொண்டு போய்விடும்.

ஆசனவாயில் உள்ள இரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்பட்டு, அதனுள்ளேயிருக்கும் இரத்த நாளத்தின் சுவர் மெல்லியதாகி, மலம் கழிக்கும்போது இரத்த நாளங்கள் கிழிந்து ரத்தம் வெளியேறுவதை ‘பைல்ஸ்’ என்று சொல்கிறோம்.

சந்தேகம் சரியா 34: பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? | சந்தேகம்  சரியா 34: பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? - hindutamil.in

வலியில்லாமல் இரத்தம் மட்டும் வெளியேறுவது. மலம் கழிக்கும்போது இரத்தத்தோடு சதையும் வெளியே வந்து, மலம் கழித்து முடித்தவுடன் ஆசனவாய்க்கு உள்ளே சதை தானாகச் சென்றுவிடுவது. இரத்தத்தோடு சதை வந்து, மலம் கழித்து முடித்த பின்னர் சதை தானாக உள்ளே செல்லாமல் அழுத்தம் கொடுத்து, உள்ளே சென்றால் அது ஸ்டேஜ் 3. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் சதை உள்ளே செல்லாமல், இரத்தத்தோடு வெளியே வந்து நிற்பது.

கடைசிநிலைக்கு வந்துவிட்டால் கண்டிப்பாக அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டும். பைல்ஸின் ஆரம்பகட்டத்தில் இரத்தம் மட்டும்தான் வலி இருக்காது. ஆனால், அடுத்தடுத்த கட்டங்களில் வலியும் உண்டாகும்.

அதிக நேரம் ஒரே நிலையில் உட்கார்ந்திருப்பது, சரியான நேரத்தில் மலம் கழிக்காமல் இருப்பது, முழுமையாக இல்லாமல் அரைகுறையாக மலம் கழிப்பது ஆகியவைதான் பைல்ஸ் உண்டாவதற்கான முக்கியமான காரணங்கள்.
மூல நோய் வருவதற்கான காரணங்கள்! | Seithy.com - 24 Hours Tamil News Service,  World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil  entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
மலத்தை இறுகவிடாமல் பார்த்துக்கொண்டு, தினமும் ஒரே நேரத்தில் மலம் கழிப்பது… அதிக நேரம் ஒரே நிலையில் உட்காராமல், எழுந்து நடப்பது போன்றவற்றைச் செய்தால் இந்தப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

மாவுச் சத்துகள் நிறைந்திருக்கும் உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது. பிரெட், மைதா போன்ற உணவுகளை மட்டுமே உட்கொள்ளக் கூடாது.

பீன்ஸ், அவரைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளையும், ஆப்பிள், கொய்யா போன்ற பழங்களையும் சாப்பிட்டால் மலம் இறுகாமல் மென்மையாகவும், உதிரியாக இல்லாமல் மொத்தமாகவும் வெளியேறும். மலச்சிக்கல் உண்டாகாது. அதனால், மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது. அசைவ உணவுகளைச் சாப்பிடவே கூடாது என்பதில்லை; அதை மட்டுமே அதிகமாகச் சாப்பிடக் கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here