மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் ஏறிக்கொள்வதற்கு எனக்கு பைத்தியம் பிடிக்க வில்லை

0
182

மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் ஏறிக்கொள்வதற்கு எனக்கு பைத்தியம் பிடிக்க வில்லையெனத் தெரிவித்த முன் னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, அடுத்த வருடமும் மிகவும் நெருக்கடியான வருடமாக இருக்கும் என் றும் கூறினார்.

பிரதமர் பதவியை, ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக் கப்படுகின்றன எனத் தகவல்கள் கசிந்திருந்தன. அதில், உண்மை எதுவும் இருக்கின்றதா? என்பது தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ரணிலிடம் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நாட்டில், தற்போது ஏற்பட்டிருக்கும் ஐக்கிய அமெரிக்க டொலர் பற்றாக்குறை, அடுத்த வருடம் ஜனவரி இறுதி வரையிலும் இருக்கும். பொரு ளாதாரமும் மிகவும் கடினமான நிலையில் நிற்கிறது என்று தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, அடுத்த வருடமும் மிகவும் கடினமான வருடமாக இருக்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here