மெக்சிகோ நீச்சல் குளத்தில் குழந்தை உட்பட 7 பேர் சுட்டுக்கொலை

0
175

மெக்சிகோவில் உள்ள பொது நீச்சல் குளம் ஒன்றில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய குவானாஜுவாடோ மாகாணத்தில் கோர்டசார் நகரில் அமைந்துள்ள நீச்சல் குளத்துக்கு, சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பின்னர் அங்கிருந்த கடை, பாதுகாப்பு கமெரா உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு பாதுகாப்புப் படையினர் வந்தபோது, சிறு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்த நிலையில் இருந்தனர்.

பலத்த காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை தேடும் பணியில் மெக்சிகோ ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here