மெட்ரோ தொடருந்து – கொழும்பில் நடைமுறைப்படுத்த திட்டம்

0
101

கொழும்பில் இருந்து நீர்கொழும்பு வரை 25 புகையிரத நிலையங்களுடன் மெட்ரோ தொடருந்து திட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டப்பட்டுள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து நீர்கொழும்பு வரையிலான 41 கிலோமீற்றர் வீதியில் தூண்களின் மீதான இந்த மெட்ரோ தொடருந்து திட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த நிர்மாணத்துடன் தொடர்புடைய தனியார் நிறுவனங்கள் இந்த திட்டத்திற்காக 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எவ்வித செலவின்றி முதலீடு செய்ய இணங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் திட்டத்துக்கான அமைச்சரவைப் பத்திரம் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கூட்டுப் பிரேரணையாக முன்வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பான கலந்துரையாடல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, இலங்கை முதலீட்டு சபையின் பிரதிநிதிகள், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் முதலீட்டு நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here