லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம மெரேயா வழியான நுவரெலியா பிரதான வீதியில் லொறியொன்று பாதையை விட்டு விலகி மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் அவ் வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது06.04.2018 காலை 6 மணியளவிலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
மெரேயா பகுதியிருந்து நுவரெலியா நோக்கி சென்ற லொறியே டெஸ்போட் பகுதியில் பாதையை விட்டு விலகி மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளமையினால் குறித்த மார்க்கத்திற்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
விபத்தினால் யாருக்கும் பாதிப்புகள் இல்லை என்றும் குறித்த மார்க்கத்திற்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்