மேக்கப் போடாமல் அழகிப்போட்டியில் கலந்து கொண்ட அழகி: 94 வருட வரலாற்றில் முதல்முறை!

0
155

94 வருட அழகிபோட்டி வரலாற்றில் இதுவரை மேக்கப் போடாமல் கலந்து கொண்ட முதல் அழகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது
அழகிப் போட்டி என்றாலே அழகிகள் மேக்கப் போட்டுக் கொண்டு வருவார்கள் என்பதுதான் இதுவரை பார்த்திருக்கிறோம். ஆனால் லண்டனை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி மெலிசா என்பவர் 2022ஆம் ஆண்டின் இங்கிலாந்து அழகிப்போட்டியில் மேக்கப் போடாமல் இறுதிச்சுற்று வரை முன்னேறிய உள்ளார்.
இவர் தனது இயற்கையான உள்ளார்ந்த அழகை வெளிப்படுத்தவும், சமூக வலைதளங்களில் அழகு என்றால் சொல்லப்படும் நிர்ணயங்களை மாற்றவும் மேக்கப் இல்லாமல் அழகி போட்டியில் கலந்து கொண்டிருப்பதாக மெலிசா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

அக்டோபர் 17ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற இருப்பதாகவும் மெலிசா இந்த போட்டியில் நிச்சயம் பட்டம் வெல்வார் என்று கூறப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here