மேற்கு இந்தியத் தீவுகள் அணி உடனான ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்

0
1

வங்​கதேசம் – மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி மிர்​பூரில் நேற்று நடை​பெற்​றது.

முதலில் பேட் செய்த வங்​கதேச அணி 50 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 296 ரன்​கள் குவித்​தது. சவுமியா சர்க்​கார் 86 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 91 ரன்​களும் சைஃப் ஹசன் 72 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 80 ரன்​களும் விளாசினர்.

297 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 30.1 ஓவர்​களில் 117 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக அகீல் ஹோசைன் 27, பிரண்​டன் கிங் 18, அலிக் அதானஸ் 15, கீசி கார்ட்டி 15, ஜஸ்​டின் கீரிவ்ஸ் 15, ஷேர்ஃபேன் ரூதர்​போர்டு 12 ரன்​கள் சேர்த்​தனர். வங்​கதேசம் அணி சார்​பில் நசம் அகமது, ரிஷாத் ஹோசைன் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை​யும் மெஹிதி ஹசன், தன்​விர் இஸ்​லாம் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை​யும் வீழ்த்​தினர்.

179 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற வங்​கதேச அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் போட்டி தொடரை 2-1 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது. முதல் போட்​டி​யில் வங்​கதேசம் அணி 74 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. 2-வது ஆட்​டத்​தில் மேற்கு இந்​தி​யத் தீவுகள் அணி சூப்பர் ஓவரில் வெற்றி கண்டிருந்தது.

hindutamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here