மேலதிக கல்வி வகுப்புகளுக்கு தடை

0
236

ஊவா மாகாணத்தில் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு வார இறுதி அல்லது விடுமுறை நாட்களில் பாடசாலை நேரத்தின் பின்னர் கட்டண அடிப்படையில் ஆசிரியர்களால் நடத்தப்படும் மேலதிக கல்வி வகுப்புகள் இன்று (22) முதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன.

02/2023 சுற்றறிக்கையின் ஊடாக, மாகாணக் கல்வி அமைச்சு, மாகாணக் கல்விப் பணிப்பாளர், பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோருக்கு இவ்வாறான வகுப்புகளைத் தடை செய்யுமாறு எழுத்துமூல அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

விதிகளை கடைபிடிக்காத ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அமைச்சு தீர்மானித்துள்ளதுடன் விசாரணைக் குழுக்களையும் நிலைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலதிக வகுப்புகளுக்குச் செல்லாத பாடசாலை மாணவர்களை பாடசாலை ஆசிரியர்கள் புறக்கணிப்பதாக ஊவா மாகாண ஆளுநர் மற்றும் அமைச்சு செய்த முறைப்பாடுகளை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here