மடுல்சிமை தேயிலை பயிர்செய்கை நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தெரேசியா மோரா கிவ் சென்ஜோன்டிலரி கிலானி ஆகிய தோட்டபகுதிகளை சேர்ந்த வெளிகள உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் சுமார் 07மாத கால மேலதிக கொடுப்பணவை வழங்கபடாது இடைநிறுத்தபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவ டின்சின் நகரில் 01.08.2108புதன் கிழமை காலை 10மணியிலிருந்து ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது.
இந்த ஆர்பாட்டத்தின் போது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது மடுல்சிமை தேயிலை பயிர்செய்கை நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் தங்களுக்கு எவ்வித அறிவிப்புகளும் இன்றி எங்களுக்கு வழங்கபட வேண்டி மேலதிக கொடுப்பணவுகளை தோட்ட நிர்வாகம் வழங்குவதில்லை ஏன் வழங்கவில்லையென தோட்டநிர்வாகத்திடம் கேட்டால் கூறுகிறார்கள் நிறுவனத்தில் இடைநிறுத்தபட்டுள்ளதாக ஆனால் எங்களை தோட்டநிர்வாகமும் கம்பணியும் சேர்ந்து கொண்டு எங்களை பழிவாங்குவதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
எங்களுக்கு மேலதிக கொடுப்பணவு வழங்கபடாமைக்கு எதிர்ப்பு தெரவித்தே தான் இன்றைய தினம் நாங்கள் தொழிலுக்கு செல்லாது இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆர்பாட்டகாரர்கள் மேலும் தெரிவித்தனர். இதேவேலை அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்து குறித்த உத்தியோகத்தர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதினால் சில மணி நேரம் போக்குவரத்து தடைபட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.
இதேவேலை கலகதடுப்பு பொலிஸாரும் வரவழைக்கபட்டமை குறிப்பிடதக்கது
எனவே எங்களின் மேலதிக கொடுப்பணவை வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கபட வேண்டுமெனவும் ஆர்பாட்டகாரர்கள் கோறிக்கை விடுத்தனர். ஆர்பாட்டம் இடம் பெற்ற பகுதிக்கு சமூகமளித்த பொலிஸ் உதவி அத்தியட்சகர் தஸாநாயக்க தலைமையில் ஆர்பாட்டகாரர்களோடு கலந்துரையாடபட்டபிறகு ஆர்பாட்டம் கைவிடபட்டமை குறிப்பிடதக்கது
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)